திசைமாறிய பறவைகள்!
உனக்குத் தெரியுமா?
உன்னை நான்
நினைக்கும் போது
என் இதயத்துச்
சிகப்பு நீர்
வெண்பனியாய் உறைகிறது..!
இதயத்துடிப்புகள்
தப்புத் தாளங்களாய்
முரசு கொட்டுகிறது..!
நெஞ்சில்
பாரம் கூடுகிறது..!
கண்களில்
காவேரி ஊற்றெடுத்து
நீர் பெருகி
கரை முட்டி
உடைந்து
வெள்ளமாகிறது..!
வாயின் வார்த்தைகள்
குடிகாரனின்
குரலாகிறது..!
மார்கழிப் பனியில்
என் மேனியில்
கோடை உஷ்ணம்...
ஏசி ரூமில்
வியர்வை வெள்ளம்..!
உன்னைப் பார்க்க
பிடிக்காத
என் கண்கள்..!
உன் பேச்சைக் கேட்கப்
பிடிக்காத
என் காதுகள்..!
உன்னோடு பேசப்
பிடிக்காத
என் நாக்கு..!
மொத்தத்தில்
உன்னை வெறுக்க
நினைக்கும்
நான்..!
ஏன்..?
நான்
நானாக இல்லையா...?
அல்லது...
நீ
நீயாக இல்லையா...?
எங்கோ
திசை மாறிப் பறக்கும்
இரு பறவைகள்!!
- பாளை.சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.