மறந்து போ...!
விதிவழி வாழ்வு என்பது தவறு
மதிவழி விதியே வாழ்வின் உறவு
எழுதும் விதியை எங்கள் கரங்கள்
அழுதும் விதியை ஏற்கும் சிரங்கள்.
நாட்குறிப்பு எழுதிட ஆறும் மனங்கள்
இடறி விழுமே வாசித்த சினங்கள்- சிலவேளை
முடிந்த பிரச்சனைகள் முடியாது இருக்க
மறந்த பழிகள் மாளாதிருக்க எழுதுடையறி
எழுதியதாலே ஏறிய அழுத்தம் இறங்கும்- எழுதி
பழகியதாலே பிரச்சனைகள் என்றும் அடங்கும்
வாசித்துப் பார்க்கையில் யாசிக்கும் அமைதி
யோசித்துப் பாருன் மனநின்மதி கருதி
மறதி ஒன்றே அமைதிக்கு மருந்து- இதில்
உறுதி யாயிரு இதுவே அருவிருந்து
மறதியில் தானே ஜனனங்கள் கொள்ளும்- உன்
மறதியின் பின்னரே மரணமும் அள்ளும்.
-நோர்வே நக்கீரா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.