சுயநலக்காரியான தாய்...?
அம்மா...!!!
நான் பிறந்தபோது அழுதாய்
நானும் அழுதேன்
தடவிக்கொடுத்து தாய்மை தந்தாய்!
நாம் அழுதபோது
அனைவரும் ஆர்ப்பரித்தனர்
ஒருவரின் துன்பத்தில் தானே
இன்னொருவர் இன்பம்.
ஒராயிரம் ஏழைகளின் கண்ணீரில்தானே
ஒரு பணக்காரன் சிரிக்கிறான்
இன்று மூச்சை விட்டு
அழுகையை நிறுத்தினாய்
மூர்ச்சையாகியும்
அழுதுகொண்டே இருக்கின்றேன்.
அனைவரும் அழுகின்றனர்
உன்னைத் தவிர...
அழுகையை நிறுத்தியது
நான் காலம் முழுவதும் அழுவதற்கா?
என்னை அழுவதற்குப் பழக்கிவிட்டு
நீமட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டாயே...
எப்படி சுயநலக்காரியானாய் தாயே...!
- நோர்வே நக்கீரா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.