உயிர்த்தீண்டல்கள்
அன்புத் தாயின் அறுசுவை மறந்து
ஆருயிர் தாரத்தின் ஆலிங்கனம் துறந்து
இன்மொழி மழலை கேட்காமல் பிரிந்து
ஈச்சமர நிழல்தேடி கால்கடுக்க திரிந்து
உற்றமும் சுற்றமும்வாடிட வளர்ந்து பிறந்த
ஊர்விட்டு ஊதியம்தேடிட வானேறி பறந்து
எண்ணம் என்னவளிடம்விட்டு மடல்களால் சேர்ந்து
ஏழுகடல் தாண்டி உடலால் சோர்ந்து
ஐவிரல்கள் இரண்டும் சேரும்நாள் விரைந்தே
ஒர்நாள் நனவாய் கண்முன்னே பரந்துவிரிய
ஓடியே வருவேன் ஒருநொடியில் அன்புத்தீயெரி
ய
ஔவையாய் நீயும் கைத்தடியுடன் நானும்
(அ)ஃறிணை உணர்ச்சிகளாய் நம்இளமை முடியுமுன்!
அதுவரை தொடரட்டும் தொலைபேசியில்
நம் உயிர்த்தீண்டல்கள்...
- ஆடலரசன், ஐக்கிய அரபு அமீரகம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.