பசுமை...!
ஆதி நிறங்கள் ஏழு
அதில் பிறக்கும் நிறங்கள் நூறு
மனதை மயக்கும் பச்சை
காரணம் அதன் வளமை.
மனித உயிர்கள் வாழ
நீரும் உணவும் தேவை
இதை தருவது என்றும் மரமே
அதன் நிறமோ என்றும் பசுமை.
பசுமை இல்லா காடு
அதன் பெயர் வறண்ட மேடு
நட்பிலும் வேண்டும் பசுமை
அந்த நினைவுகள் தருமே குளுமை.
பசுமை நினைவுகள் இருந்தால்
ஆதியைப் போற்றத் தோணும்
செய்த நன்றியை நினைத்தால்
பழைய நட்பும் பசுமையாய் துளிர்க்கும்.
முதல் வகுப்பெடுத்த ஆசான்
முதலில் கிடைத்த நண்பன்
முதலில் தோன்றிய காதல்
இவை எல்லாம் பசுமை நினைவே.
அடிக்கடி நீர்விட்டு வளர்த்தால்
செடி செழித்தே வளரும் பசுமையாய்
அடிக்கடி நட்பை நினைத்தால்
நாளும் தொடரும் பசுமையாய் உறவு !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.