விவசாயம் காப்போம்!
கருக்கல் வயலில் விவசாயி இல்லே
ஏர்உழ வயலுக்கு எருதுமே இல்லே
ஏருபிடிக்க கைகள் இங்கே தருவது இல்லே
சேறுபூசிக்க கால்கள் இங்கே வருவதே இல்லே
விதை விதைக்க நாட்டிலே நிலம் இல்லே
நாத்து நட நாட்டுப்புற நங்கையர் யாருமே இல்லே
பாசனத்துக்கு நீர்பாய்ச்ச கிணத்தில தண்ணி இல்லே
ஜாதிசனத்துக்கு கள்ளிறக்கி மதுகிண்ணத்தில் தன்னிலையிலேயே இல்ல
களைபுடுங்க கஞ்சி கலயத்தோட கன்னியர்கள் இல்லே
காளையர்நடவைக்கு அஞ்சி கொஞ்சகாலமா நாடவுமே இல்லே
ப்ளாட்டா போட்ட நிலங்களுக்கிடையில் வயல்கள் இல்லே
வரப்புச்சண்டைக்கும் வாய்க்காத் தகராறுக்கும் வழியே இல்லே
வயல அழிச்சி கட்டிடம் கட்டிப்புட்டோம் புள்ளே
பசிய அழிக்க கல்லறைய தோண்டிபுட்டோம் புள்ளே
விவசாயத்தில் விளைச்சல் பாத்தபூமிய வித்துபுட்டோம் புள்ளே
விஷச் சாயத்தில் விளஞ்சத சோறாக்கக் கத்துகிட்டோம் புள்ளே
அதனால... புள்ளே... வயல் காப்போம்!!!
விவசாயம் காப்போம்!!! விவசாயியைக் காப்போம்!!!
- ஆடலரசன், ஐக்கிய அரபு அமீரகம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.