கானல் நீர் வாழ்க்கை!
கற்பனைகள் ஆயிரம்...
காற்றில் கரையும்
கற்பூரமாய்...!
எண்ணங்கள் குவியலாய்...
நெருப்பில் உருகும்
மெழுகுவர்த்தியாய்...!
பாசப் பிணைப்புகள்...
நிலத்தில் நீந்தும்
மீனாய்...!
அன்புக்கு அடிமை...
வலையில் சிக்கிய
பூச்சியாய்...!
பண்புக்கு பாத்திரம்...
பணத்தில் மறையும்
உண்மைகளாய்...!
நம்பிக்கை நட்சத்திரம்...
வானில் தத்தளிக்கும்
கயிறறுந்த பட்டமாய்...!
இன்பத்தில் திகைப்பு...
தோன்றி மறையும்
நீர்க் குமிழியாய்...!
இது,
ஏழை எங்களின்
அன்றாட வாழ்க்கை...!
கானல் நீர்... வாழ்க்கை...!!
- பாளை.சுசி, திருநெல்வேலி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.