வானம் தொடு!
பூமியின் உச்சம் வானம்
வெற்றியின் உச்சமும் அதுவே
காண்பதற்கு அருகில் தெரியும்
தொட முயன்றால் தூரம் புரியும்
வெற்றியின் இலக்கும் அப்படியே
விடாது முயன்றால் தொட்டிடலாம்.
முயன்றால் முடியாததேது
இதை மனதில் கொள்வோம் இன்று
இரும்புப் பறவை பறக்க
ரைட் சகோதரர் முயன்றது அதிகம்
அதிக முயற்சியின் வெற்றிதான்
அழகாய் பறந்தது விமானமாய்.
சிறிய இலக்கு குற்றம்
இதைச் சிகரம் தொட்ட கலாமும்
உறுதியாய் இறுதிவரை சொன்னார்
நாமும் சிறகடித்துப் பறப்போம்
தடைகளைத் தகர்த்தே தீரமாய்
வானத்தைத் தொட்டே மகிழ்வோம்.
முடிந்தவரை முயற்சி செய்
முயற்சிக்கு முன் பயிற்சி செய்
பயிற்சியும் முயற்சியும் சேர்ந்தாலே
இலக்கு எதுவாயினும் எளிதாகும்
அது வானமாயினும் வசமாகும்
முயற்சி எடுத்தே வானம் தொடு !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.