பிழைகள் செய்தே...
அர்த்த ஜாமத்தில்
நெட்டை வீதியில்
நிமிர்ந்த நடையில்
நடக்கும் காலம்
சுதந்திர காலமென்றான்
காலங்கள் காத்திருக்கவில்லை
நூற்றாண்டில்
நுண்ணிய மாற்றங்கள்
பட்டிதொட்டி வரை
பரிணமித்து விட்டது
தாய்மொழி தள்ளாடுது
வாயுணவு வயிறேறுது
அணியுமுடை அலைமோதுது
கையிலே பேசி
கண்களில் கணினி
காலம் தப்பாத
அடிமையின் அடையாளங்கள்
மாற்றத்துக்கேற்ப
மாறாதுவிடின்
நாகரீகத்துக்கு
நன்றியற்றவராவோமே
நல்லதுதான்
மாற்றங்களும் வேண்டும்
மரணம் வரும் வரை
மாறியதாக மாறாத
தவறுகளை விதைக்கும்
மனிதனாகவல்லவா
மாறி வருகிறாய்
சாதியும் மதமும்
சபை நடுவே கூத்தாடுது
சாஸ்திரங்களும் வேதங்களும்
சரிநிகராய் திண்டாடுது
நீயாக வாழாது
எலும்பைக் கவ்வும்
பிராணியாக நீயிருப்பதால்
என்னவோ
பிழைகள் செய்தே
நாகரீகம் வளர்கிறது...
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.