அரசியல் துறவி!
பற்றற்ற நிலைதான் துறவு என்றால்
காமராஜரும் துறவிதான் என்பேன்
குடும்பத்தைத் துளியும் நினைத்ததில்லை
தாய்க்குக் கூடத் தனிச் சலுகையில்லை.
ஒரே தங்கை மீதும் தனிக்கவனம் இல்லை
சொந்தங்களுக்கும் சிபாரிசு இல்லை
தன் இனத்தின் பக்கமும் சாயவில்லை
நாடே வீடென மனதில் கொண்டார்.
பதவி ஆசை அவருக்கில்லை
முதல்வர் பதவியை உதறிவிட்டு
கட்சிப் பணியாற்றவும் தயங்கியதில்லை
இளையவரை முன் நிறுத்திய பெருந்தலைவர்.
சொத்து பணம் சேர்க்கவில்லை
ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை
அரசியலால் அவருக்குப் பலனில்லை
மக்கள் நலனை மட்டுமே வேண்டினார்.
உண்மைத் துறவிக்கு ஒரே இலக்கு
இறைவன் திருவடி தொழுவது தான்
அரசியல் துறவி காமராஜர் இலக்கு
மக்கள் மனநிறைவாய் வாழ்வதுதான்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.