நாயினம் இதுவோ....
சீர்திருத்த
சீராக வாழ்ந்த
மாகான்களே
சீறியெழும் வரம்
உமக்கில்லையோ...
பார்போற்றும்
பாரதப்பூமியில்
பரிதவிக்கும்
பாவையருக்கேனும்
ஒரு விடிவில்லையோ...
சாதியின் பெயரில்
சகதிச் சமூகம்
சத்தமேயில்லாது
சரித்திரம் காணத் துடிப்பது
சகிக்கவில்லையே...!
மனிதன் என்ற ஓரினத்தில்
மனிதம் இல்லையே...
தலித் சமூகமென
தள்ளி வைத்துப் பார்க்கும்
கூட்டம்
தமது உடல் பசிக்கு
உன்னதமான
ஓரினமாக மதிப்பது
ஓரவஞ்சனையே...!
நக்கிற நாய்க்கு
செக்கும் தெரியாது
சிவனும் தெரியாது
நாயினம் இதுவோ...!
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.