வண்ணங்கள் வேறு; வடிவங்கள்...?
படைத்தவனை
அறியவில்லை!
ஆனாலும்
பார்க்கும் பக்கமெல்லாம்
பல வண்ணக் கோலங்கள்
பச்சையிலொன்று
மஞ்சளில் மற்றொன்று
நீலத்தில் இன்னொன்று
புல்லாகப்
பூண்டாகப்
புழுவாக
மரமாகக்
கல்லாக
மனிதனாக
ஆனாலும்
நாடு வேறு
நகரமும் வேறு
ஊரும் வேறு
உருவங்களும் வேறு
பெயரும் வேறு
பெருமைகளும் வேறு
நாளும் நையப்புடைத்துழைத்த
நாலு பணத்தை
நாலாபக்க மாயைக்குள்
மாயமாக்காது
நாளும்
நம் கண்முன்னே
நமக்காகப் படைக்கப்பட்ட
மனிதர்களுக்கு
ஊன்றுகோலாய்
நாளும் வாழ்ந்து பார்
சித்தனும்
சிவனும்
சொன்ன தத்துவச்
சொர்க்கம்
தாளின் கீழே...
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.