முழுமை பெற முனைந்திருக்கிறேன்...!
என்னை
உருவாக்க முனைந்திருக்கிறேன்.
உன்னைக் காணவோ
உன்னோடு அளவளாவவோ
நேரமில்லை எனக்கு...
என் பணிகள் தடைபட
உனக்குச் சேவகம்
செய்து கொண்டிருக்கலாகாது
என்னால்...
நீ தேவனுமல்ல
நான் பக்தனுமல்ல
உன்னிடம்
நான் வழிந்து கொண்டு நிற்க...
நீ உரைப்பது
வேதமாகவே இருந்தாலும்
இப்போது
அதை நான்
செவிசாய்த்துக் கேளேன்...
என்னை
உருவாக்க முனைந்திருக்கிறேன்.
முழுதாய்
நான் முழுமைப் பெற வேண்டும்.
உன்னைப் போலல்லாது
நான் நானாக...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.