பழகிப் போச்சு!
பாசங்கள் நேசங்கள்
வேசங்களென எல்லாம்
எனக்குப்
பழகிப் போச்சு!
கூடப் பிறந்தாலும்
கூடவே வாழ்ந்தாலும்
கூடிய நட்பானாலும்
யாவுமே பொய்யான
உறவென்றே
பழகிப் போச்சு!
வலிக்க வலிக்க
அழுத கண்ணீர்
மரத்த போது
மனமழுது கொண்டே
வாய் சிரிக்கப்
பழகிப் போச்சு!
எண்ணற்ற தடங்கள்
எனக்குள் வலிகளாக
வருகையில்
வருடிய விரல்களுக்கும்
பழகிப் போச்சு!
சிரிச்சுப் பேசும்
பெண்ணாக
சிறு பிள்ளையாக
வேசமிட்ட வாழ்வும்
பழகிப் போச்சு!
ஏக்கங்கள் தேக்கங்களாக
எனக்குள்
நிலைகொள்ளவும்
பழகிப் போச்சு!
போகிற பாதையில்
புன்னகையைப்
பரிசாக்கவும்
பழகிப் போச்சு!
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.