வாய்க்கால் நீர்!
வளைந்து ஓடும் வாய்க்காலே
வேகமாய் எங்கே ஓடுகிறாய்
தங்கப் பதக்கம் வாங்க ஆசையோ
ஓடி உன்னைத் தயார் செய்கிறாய்?
அழையாத விருந்தாளியாய்
நண்டு வீட்டில் நிரம்புகிறாய்
வழியில் யார் அழைத்தாலும்
வலம் இடமாய்த் திரும்பிச் செல்கிறாய்
குறுக்கே யார் தடுத்தாலும்
குருட்டுத்தனமாய் அடிக்கிறாய்
மந்தை உன்னைக் குடித்தாலும்
குறையாமல் கொடுக்கிறாய்
ஓடியோடிக் கால்கள் வலித்ததோ
கழனியிலேத் தங்கிவிட்டாய்
தங்கப்பதக்கக் கனவினைத் தொலைத்தாலும்
உழவனுக்கு உயிரைக் கொடுத்து
விவசாயம் செழிக்க உதவிய
நீயே தங்கம்தான்!
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.