கிழிந்த ரூபாய்த் தாள்
கொஞ்சம் பொறு
சிந்தித்து விட்டு வருகிறேன் செல்லாக்காசே!
சாதாரண காகிதம் உன்னை
நாதர் முடிமேல் வைத்தானே!
உள்ளங்கையில் உன்னை வைத்து
உலகையே விலை பேசினானே!
ஏழையவன் கைபட
கூசாமல் முகம் சுழித்தாயே!
சரிபாதி கிழிந்த உன்னை
ஒரு பாதியும் ஏற்கவில்லையா!
உனக்கும் வயதாகியதென்று
இன்றாவது உணர்ந்தாயா?
உன்னை ஒட்டுப் போட்டு விட்டேன்
எப்படியாவது கை மாறு!
இன்றைய பொழுது உன்னையே நம்பியிருக்கு...
என்னிடமிருந்து கைமாறு...!
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.