உறுதிமொழி
என் கடமைகளின்
நிர்ப்பந்தங்கள் குறித்த
ரகசியத்தை
உன்னிடம் விவரிக்க
நான் தயாராகயில்லை.
உனக்கதை தெரியபடுத்த
அது -
கேலிக்கூத்தாகி விடக்விடும்.
உன்னாலாகாத காரியம்
என்னாலாகுமென்ற நம்பிக்கை
உனக்குள்
துளிர்த்திருக்கும் பட்சத்தில்
உன் பணி
எதுவாகயிருப்பினும் சொல்
இனிதே செய்து முடிக்கிறேன்.
எனக்குப் பணியிடுவது
உனக்கு விருப்பமென்றாலும்
அப்போதும் சொல்லலாம்.
அப்படி நீ சொல்லி
நான் செய்யாமல் போனால்
பயனற்றுப் போனவனாகிடுவேன்.
நீ இட்ட பணியின்
நிலையறிய காலத்துளிகள்
சற்றே நீளலாம்.
உன் சரியான
ஒத்துழைப்பின்மையாலும்
தாமதமாகலாம்.
எனினும்
உன் காரியம் தீரும் வரை
இரைந்து கொண்டிருப்பேன்
ரசனைக் குறைவின்றிய
கடலலையின் பேரோசையாய்.
இதோ உன்னிடம்
சொல்ல மறந்த
செய்தியொன்றிருக்கிறது.
எனது நிலை குறித்தோ
எனது இன்னபிற
இத்தியாதிகள் குறித்தோ
நீ நிர்மாணிக்காமலிருக்க வேண்டும்.
உன் வருத்தத்தை ஏற்க
நானெப்போதும் தயாராகயில்லை.
நீ இட்ட பணியினை
இனிதே முடிப்பதாய்
இக்கணத்தில்
நான் உறுதி மொழிகிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.