யார் கடவுள்?
எத்தனையோ
படிகள்
ஏறியபோதும்
ஏக்கங்களும்
ஏமாற்றங்களும்
போராட்டங்களும்
பொய்முகங்களும்
மாறவில்லை!
மண்ணுலகில்
மாந்தராய்
பிறந்தவரை
மனிதனாய்
சிந்திக்கவிடுவதில்
மாக்களாக வாழும்
சில மனிதர்களுக்கும்
மனமில்லை!
மறுக்கவும்
மறக்கவும்
மகுடமாக
உயர்துநிற்கும்
ஆலயங்களை
சாட்சிக்கழைத்து
அழகாக
இயம்புகின்றனர்
பூர்வயென்ம பாவமென!
பாவத்தையும்
புண்ணியத்தையும்
பகுத்தவன்
கடவுளென்றால்...
ஓரவஞ்சகனாக
ஓராயிரம்
துன்பங்களை
இல்லாதவனுக்கு
வழங்க
இருப்பவனிடமிருந்து
இலஞ்சம் வாங்கிக்
கணக்குப் போடுகிறானோ?
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.