பெண்மகள்
காற்றையே மூச்சில் கைது செய்வாள்
ஆணில் அமைதியாய் துயில்கொள்வாள்
படிக்க முடியாக் காவியமாவள்
கண்ணிலே கதை சொல்வாள்
புதிருக்கு முன்னே நின்று, புன்னகையில்
புதிர் போடும் முதிர்ந்த கன்னியவள்
மார்புச் சூட்டிலே ஆணைத் துடிக்கத் துடிக்க
சித்திரவதை செய்யும் புனித அரக்கியவள்
ஆநிரைகள் ஆயிரம் வந்தாலும்
ஓர் ஆணின் நிரை காணும் நெஞ்சமவள்
கர்வத்தைக் கட்டிலில் கழட்டிவிட்டு, ஆணை
நிராயுதமாய் வெல்லும் வித்தைக்காரியவள்
கட்டில், தொட்டில் பிள்ளைகளை
தினம் தாலாட்டிப் பாடும் தாயவள்
மகளாய் மண்ணில் மீண்டும் பிறந்து
தந்தைக்கு இரண்டாம் தாயான மழலையவள்.
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.