பருவ மாற்றம்
நேற்று நட்ட சிறு செடி நான்
இன்று வளர்ந்து ஆளானேன்
மார்புத் தசைகள் இறுகிப் பெருகி
திமில் வளர்ந்த கடேரியானேன்
முகத்தில் சில பருக்களையெல்லாம்
கிள்ளித் தள்ளிக் கருப்பானேன்
மூக்கின் கீழே மீசையரும்ப
சுருட்டி முருக்கிவிடத் தயாரானேன்
உன்னைக் கண்ட மறுநாளன்று
ஹார்மோனை சுரக்கலானேன்
புன்சிரிப்பை மெல்ல மெல்ல
நெஞ்சினிலே சுமக்கலானேன்
எண்ணமெல்லாம் உன் நினைவை
மொத்தமாய்த் திரட்டி ரசிக்கலானேன்
உன்னிடம் ஏதும் கேட்காமலே
கற்பனையில் விரலோடு கை கோர்த்தேன்
காரணம் காதலாலே...
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.