பெண்மையின் மயக்கம்
நாகத்தின் விஷம் கடைந்து
கோப்பையிலேக் கொட்டி வைத்து
செந்தேளின் கொடுக்கைப் பிய்த்து
வெண்ணிறப் பாலிலே ஊறவைத்து
குளவியின் முல்லை ஒடித்து
நுனி நாக்கில் கொட்டவிட்டு
கருத்த சிலந்தியின் சிறுபல்லை
இதம் பதமாய் கீரியெடுத்து
ஒன்றாய்க் கலந்தாலும் போதை தரா
பெண்மையின் பார்வை என்மீது பட
கருவிழியின் காந்தப்புலமோ
கிரகங்களைக் கிரங்கடிக்கிறதே
காளைகளே கணித்திருங்கள்
மது மயக்கம் மணிப்பொழுதைக் கடக்கும் வரை
கன்றுகளே தெரிந்திருங்கள்
மாதின் கிரக்கம் அவள் பூமியில் உள்ளவரை
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.