எதிர்க்கொள்ள...
சிகரங்களைச் சுமந்தபடி
வழமையாய்
நின்று கொண்டிருக்கிறது
மலை.
கதவின்
பின்னாலிருக்கும் உலக்கை
உரலை நோக்கி
இடம்பெயரவில்லை.
தொழுவத்திலிருக்கும்
எருதுகள்
எல்லை மீறாமலிருக்கிறது.
அப்பாவின்
மஞ்சக் கைப்பையில்
சில்லரைகள் மட்டுமே
எஞ்சிய நிலையில்
அவை காற்றின்
மொழிக்கு ஒலியெழுப்ப
கடலில் புயல்
மையம் கொண்டிருப்பதாய்
வானொலியிலும்
தொலைக்காட்சியிலும்
செய்திகள் அறிவிப்பு.
வானத்தில்
கார்மேகங்கள் சூழ்ந்திருக்க
அதை ஆர்வமாய்
எதிர்க்கொள்ள
காத்திருக்கின்றனர்
இந்த மண்ணும் மனிதர்களும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.