வெறுப்புணர்வு
அச்சடித்த காகிதத்தில் கப்பல் செய்யக் கூடாதோ
மீறி செய்த கப்பலது கட்டாந்தரையில் ஓடாதோ
முப்பால்கள் சேருமிடம் முக்கூடல் ஆகாதோ
உப்பு நீரை ஊற்றினால் தென்னை அதை ஏற்காதோ
மின்மினி பூச்சியது பகலிலே வாராதோ
மீறியது தான் வந்தால் மின்னுவது தெரியாதோ
உச்சியிலே சூரியனிருந்தால் குடிசையின் மீது வீழாதா
சூரியனைப் பழித்துவிட்டு சந்திரன் தான் வாழாதா
திலகமதை நெற்றியிலிட வண்ணமென்ன மாறிடுதா
என்னைத் தள்ளி வைப்பதினால் உன் எண்ணம் நிறைவேறியதா
மனங்கள் இரண்டை பிரித்ததினால் கெளரவம் தனியே நிற்கிறதா
மாண்ட எங்கள் காதலினால் மானம் அரியணையேறியதா
ஓர் நாள் உன்னை மண்ணு தின்னும் அதற்கு வர்ணம் பூசாதே
அந்நாள் காண நான் வருவேன் ஜென்மம் முழுதும் மறவாதே
உயிர் வாழும் வரை காதல் வாழும் வீழ்த்த நீயும் பார்க்காதே
காற்றின் வசமோடு வாசமாய் வாழும் இனி வேறெங்கும் விரட்டாதே.
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.