காதல் படுத்தும் பாடு
காதல் கடிகார முள்ளைப் போல
காதலியின் பின்னால்
ஓடத் துடிக்கும்
அவள் கரம் பிடிக்கத்
தவம் கிடக்கும்
என்னவளைக் காண
இமை துடிக்கும்
கண்டதும் காணாததைப் போல்
நடிக்கப் பழக்கும்
பல் முளையா மழலையாய்ப்
பெயரை உச்சரிக்கும்
தவறு செய்தால்
அவள் கண்கள் உன்னை எச்சரிக்கும்
சொந்தங்களை விட்டுக்
கால்கள் தனியே நிற்கும்
சிறு அடிகள் பல வைத்து
கால்கள் நடை பழக்கும்
அவளைக் காணக்
கண்கள் தினம் தவமிருக்கும்
பல இரவுகள் போர் மூண்டு
விட்டுக் கொடுக்கும்
காலையில் எழுந்ததும்
கொஞ்சத் துடிக்கும்
எல்லை மீறி அது
கெஞ்சத் துடிக்கும்
இதழ் முத்தம் பல கேட்டுப்
போர் தொடுக்கும்
ஓர் முத்தம் வென்று
சரித்திரம் படைக்கும்!
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.