தட்சணை...!
வியர்வை சிந்தி
விளைநிலத்தை
விளைச்சலாக்கி
விழி வியக்க
விடியலுக்கும்
வித்திட்ட
விவசாயியவன்
விடிவேயில்லாத
விதியைநொந்த
வில்லங்க பூமியில்
விவசாயியானது
விதியென்பதா?
விதியை விடுத்து
மதியை மதிக்க
மண்ணைத் தோண்டினாலும்
மண்ணையாள்பவன்
மதிக்காத தொழிலாக
விவசாயம்
முட்டி மோதி
கெஞ்சிக் கூத்தாடி
கூழ் குடித்து
குழிவிழுந்த கண்ணோடு
குடும்பமே குமுற
குடும்பத்தலைவனான
விவசாயியும்
குடியை மறந்த
தலைவர்களுக்காய்
கொடுக்கிறான்
தன்னுயிரைத்
தட்சணையாக...
- வாணமதி, சுவிட்சர்லாந்து.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.