நீயே சொல்ல வேண்டும்!
உன் கைபிடித்து நெடுந்தூரம் நடக்க வேண்டும்
நடக்கும் நேரமெல்லாம் நிதானமாய்க் கடக்க வேண்டும்
மேகம் நமக்குக் குடைபிடிக்க வேண்டும்
இடி மின்னல்கள் இசைக் கச்சேரி நடத்த வேண்டும்
வானவில் வண்ணங்களை நம் மீது தூவ வேண்டும்
நிலா உன்னழகில் மண்ணில் வீழ்ந்து உடைய வேண்டும்
நட்சத்திரம் உன் பெண்மையில் ஒளிர வேண்டும்
சூரியன் உன் மென்மையைக் கண்டு குளிர வேண்டும்
காலையிலே பூத்த பூக்கள் நீயின்றி வாட வேண்டும்
கிரகங்கள் கிறுக்குபிடித்து திசையொன்றாய் போக வேண்டும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் போர் அறிவிக்க வேண்டும்
வில் அம்பு போதாமல் போர் முடிக்க வேண்டும்
உன் உள்ளங்கையில் சூரியனை மூட வேண்டும்
நீ கால் வைக்குமிடமெல்லாம் புற்களாய் மாற வேண்டும்
உன் செயலால் உலகமே ஒளிர வேண்டும்
உன்னைப் பற்றி உலகம் முழுதும் பேச வேண்டும்
உன் இதயத்தில் எனக்கு இடம் வேண்டும்
உன்னோடு சேர்ந்து நான் வாழ வேண்டும்
என்னாசை நிறைவேற என்ன செய்ய வேண்டும்
என்பதையும் நீயே சொல்ல வேண்டும்!
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.