தொடரட்டும் உன் புகழ்!
இருந்தும் மறைந்தும் பேர் சொன்னாய்
இவர் போல் யாரென்று ஊர் சொல்ல
வாரி வழங்கி வாழ்ந்த நீ
எட்டாம் வள்ளல் எம்ஜியார் என்றே ஆனாய்
மூன்றெழுத்து மந்திரமாய் ஒலித்த உன் பெயர்
அண்ணாவின் இதயக்கனி என்றானது
அன்னை சத்யா மைந்தராய் நீ பிறந்த நாள்
என்றும் எளிதில் நிற்கும் மனதிலே
கண்டியில் பிறந்து குடந்தையில் வளர்ந்த நீ
படித்தது என்னவோ மூன்று மட்டும்
பிடித்ததோ மக்கள் மனதில் நிரந்தர இடம்
இன்றும் உமக்கு உண்டு அந்த இடம்.
சதிலீலாவதியில் தொடங்கிய உன் பயணம்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை
வெற்றியாய் தொடர்ந்தது திரையுலகில்
திரையுலகில் என்றும் முதல்வன் நீ
தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வனும் நீ
உன் தடத்தில் நடந்து வென்றவர் பலர்.
நீ அரசியலில் செய்த நன்மைகள் பல
உன்னை எட்டும் வள்ளல் எவருமில்லை
பட்டங்கள் பல உன்னை அலங்கரித்தாலும்
பாரத ரத்னாவாய் பாரதத்தையே அலங்கரித்தாய்
இந்த ஆண்டு உனக்கு நூற்றாண்டு
தொடரட்டும் உன் புகழ் மேலும் பல நூறாண்டு!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.