எனக்கு நீ...!
உன் வெட்கங்கள் எனக்கு கவிதை
உன் சிரிப்புகள் எனக்கு புரியாத புதிர்
உன் மௌனங்கள் எனக்கு விடுகதை
உன் பார்வை நடுநிலை
உன் குரல் எந்தன் சங்கீதம்
உன் பேச்சு மனதை வருடும் பாடல்கள்
உன் உருவம் சிற்பியின் உளிபடாத சிலை
உன் நடை பூமிக்கு புது மோட்சம்
உன் விரல் நகங்களோ தண்டனை கைதிகள்
உன் பாதங்களோ பூக்களுக்கு பஞ்சு மெத்தை
உன் ஆரவாரம் என்னுள் பெருந்திரள் கூட்டம்
உன் பனிவோ பரவசத்திற்கு முற்றுப்புள்ளி
உன் பயணங்களோ இயற்கைக்கு ஓர் சவால்
உன் குறும்புகளோ குறுந்தகட்டிலும் நிறுத்த முடியாதவை
உன் உளரள்களோ தாய்மொழிக்கு புதுக்கவிதை
உன் பெயரோ தினம் பாடவேண்டிய திருப்புகழ்
உன் படைப்பே நான் ரசிக்கும் விசித்திரம்
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.