முதல் முத்தம்
சாயம் பட்ட உதடுகள் என்னை
வரிந்து கட்டி போருக்கு அழைக்க
நடுங்கிப்போன கை விரல் வீரர்கள்
அவள் இடையில் தஞ்சம் புகுந்தனர்
படபடவென பேசும் நான் என்
கண்ணாலே கதை பேசிக் கொண்டேன்
மௌனத்திலே மொழி மாற்றிக்கொள்ள
இரு கண்கள் மோதத் தடுமாறினேன்
ஆளில்லா இருட்டினினிலே
எங்கள் இதயம் கச்சேரி நடத்தியது
தாளமில்லா ராகமதை வண்டுகள் கேட்டது
இதழ்கள் நெருங்க விட்டில்கள் சுதி சேர்த்தது
கச்சேரி உச்சமாகக் கண்களை மூடிக்
கவ்விக்கொண்டேன்
இறுதியில் உதடுகள் எச்சமாகியது
எங்களை விடுவிக்கும் நேரம் மிச்சமாகியது
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.