ஒளிவுமறைவின்றி வாழ்ந்திடு!
கனவுகளின்
கரங்களைப் பற்றியபடி
நடத்தல் சுகம்தான்.
வெளிச்சத்தில்
தொலைத்த நிழலை
இருட்டில் தேடிப் பிடிப்பது
சாத்தியமில்லை.
கிளைகளில் ஈரம்
அற்றுப் போயிருப்பினும்
வேரின் அடியில்
ஈரம் காத்திருக்கும்
மண்.
நிர்ப்பந்தம்
இறுக்கிப் பிடித்திருப்பினும்
தன்நிலைத்
தெளிநிலைச் சுயம்
உணர்த்திடும்.
கோபுரம் நின்றிருப்பதாலே
உச்சியில்
மேலும் உயர்ந்து நிற்கிறது
கலசம்.
நதியுறிஞ்சிய மீதமே
நதியில் ஓடும்
வெள்ளம்.
உன் அர்த்தமுள்ள பிறப்பை
ஒளிவுமறைவின்றி
வாழ்ந்திடு
அதுவே
பிறப்பின் நிதர்சனம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.