காவு கொடுக்கும் உயிர்!
வயிற்றில் நெருப்புகட்டி
வயலில் கால்வைத்து
வரண்ட பூமியில்
வியர்வைநனைத்து
வழியற்று
விழிநனையும் விவசாயி
வீரவசனம் பேசி
விலைமதிப்பற்ற
உரிமைகளை
விலைகொடுத்து வாங்கியே
வீரப்பாய் அரசியல்வாதி
விதிமாறாத உலகில்
விளக்கற்ற குடிலில்
குற்றுயிரும் குறையுயிருமாய்
கொடையாளியாகிய விவசாயி
கொலையாளியாக
தனக்குத்தானே
சொல்லெடுத்து சொன்னாலும்
உயிர்கொடுத்து சொன்னாலும்
தம்மக்களை நேசிக்க மறந்த
ஓர் பூமியில்
உணர்வற்ற பலர்
வயிற்றுக்குணவு கொடுத்து
நாட்டுக்குயர்வுகொடுத்து
நாளையதலைமுறைக்கு
தனது சுயத்தை
தாரைவார்த்துக்கொடுத்த
தரணியின் நேசியான
விவசாயி
தரமற்ற மனிதனாக
வீதியெங்கும்
விழிநீர்சொரிந்து
வழிவிடு வயலுக்கு
வரம்கொடுவயிற்றுக்கென
வாயோயாது கெஞ்சியும்
பதிலற்ற பாரதபூமியில்
வழியற்று
காவுகொடுக்கின்றனர்
பரிதவித்தவுயிரை
பசியடக்கிய விவசாயி.
- வாணமதி, சுவிட்சர்லாந்து.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.