எங்கே போனாய்...?
ஒன்டிக் கட்டையா நிற்கிறேன்டி
தனியே விட்டு எங்கே போனாய்?
எண்ணெய் ஊற்றி எரிக்கிறேன்டி
உயிரே எனக்கு முன்னே ஏன் போனாய்?
திக்குத் தெரியாம நிற்கிறேனே
நீ சிதைஞ்ச இடம் நான் அறியேன்
பித்துப்பிடிச்சு நான் அலைய
பிறைநிலா தேடிப் போனாயோ...!
அன்னம் தண்ணி இறங்கவில்லை
தினம் ஆகாயத்தைப் பார்க்கிறேன்
அறைகுறையா நான் தூங்கி
அர்த்த ராத்திரியில் கண் விழிக்கிறேன்
செல்லக்குட்டி பூனையைப் போல்
என்னைத் தினம் சுற்றி வந்தாயே
தினம் நானும் சுற்ற்ச்சுற்றி அலையிறேனே
செல்லமே நீ எங்கே போனாய்...?
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.