விண்ணப்பம்
யாரிடமும் பேசாமல்
மௌனமாய்ப்
புகைந்து கொண்டிருக்கிறது
சிறியதாய் நெருப்பு.
என் மனம்
கொழுந்து விட்டெரியும்
கணத்தில்
புகையும் நெருப்பு
சுடர்விட்டு
எரியத் தொடங்கலாம்.
அப்படி
எரியும் நெருப்பு
என் நித்திரையில்
உடையப் போகும்
கனவின் பசியறிந்து
அணைந்தும் போகலாம்.
இவை
எதைப் பற்றியும்
யாதொரு கவலையுமின்றி
என் கை ரொட்டித் துண்டினைப்
பெறுவதற்கு
பிரார்த்தனை விண்ணப்பம்
வைத்து
என்னைச் சுற்றிச் சுற்றி
அரைவட்டம் போடுகிறது
ஒரு தெருநாய்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.