என்னுள் வந்தாய்...!
சாமத்தில் விழிக்கிறேன் - உன்
நினைவு வந்தால் சிரிக்கிறேன்
சோகத்தில் வீழ்கிறேன்
சாகவில்லை மீள்கிறேன்
தலையாட்டிப் பொம்மையில்லை - நான்
தானாய் அசைகிறேன்
வேடிக்கை பார்க்கிறேன் என்னுள்
விருந்தினராய் நீ வந்தால்
சக்ரமாய்ச் சுழன்ற போதும் - இங்கே
என்னில் மயக்கமில்லை
பார்வையிலே நீ அடித்த போது
சத்தியமாய் நான் எழுந்திருக்கவில்லை
சுடுபட்ட களிமண்ணாயினும் - உன்
சுய உருவம் நான் வடிப்பேன்
சுழலாமல் இப்பூமியிருந்தால்
உன்னைக் காட்டிச் சுழலவைப்பேன்
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.