மரணத்தை விட...
அன்பு மகளே!
அன்னையாக
ஆருயிர் நண்பியாக
ஆறாத புண்ணுக்கு மருந்தாக
ஆயுளுக்குமிருந்திடு
ஆரிடம் சொல்வேன்
ஓடிய வேகத்தை
உண்மையில் வாழ்ந்தேன்
ஓரிடத்தில்
ஒதுக்கப்பட்டேன்
உருண்டோடிய காலத்தில்
உயிரைக் கையில் பிடித்து
உறக்கம் தொலைத்து
உட்கார மனமின்றி
உலாவியபோதே புரிந்தது
உறவுகளும் வலிகளென
உன்னை உயிரான
மகளாகக் கண்டதால்
நானும் சொன்னேன்
உயிர் வாழலாம்
உயிர்சேவகி இவளுக்காக
ஒயாது பேசிய நீ
ஓர் மூன்றாண்டு
மோனமான போது
தள்ளாத வயதும்
சொல்லாத நோயும்
கொல்லாமல் கொல்ல
கோழையாகக்
கொன்று விட்டேன்
நானே என்னை
மன்னிக்க மாட்டாய்
மறப்பெண் நீ
மகளே
மனித வாழ்வில்
பாசத்தவர் மோனம்
மரணத்தை விட வலியம்மா.
- வாணமதி, சுவிட்சர்லாந்து.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.