அவள் மௌனம்
உன் மௌனத்தால் இதயத்தில் அதிர்வலைகள்
ஓயாமல் எந்நாளும் உன் நினைவலைகள்
தூதென எனக்கு யாருமில்லை
இரவுக் கனவுகளைத் தவிர!
சுயலமில்லாது உன்னையேச் சுற்றி வருகிறேன்
என் சுதந்திரத்தை நீ பறக்கிறாய்
அடிமைசாசனம் எழுதித் தருகிறேன்
அதன் அடியின் முடிவில் கையொப்பமிட்டு!
நீண்ட நாட்களாய் நினைவுச் சிறையில்
நிச்சயம் நீ வருவாய் என்று
திருடனைப்போல் விழிக்கிறேன்
திரும்பிய திசையெல்லாம் உன் ரீங்காரம்!
தரைபுரண்டு படுக்கிறேன், உன் மௌனத்தால்
தடம்புரண்டு கிடக்கிறேன்
செயலிழந்து கிடக்கிறேன், செம்மையாய்
என்னைத் தூக்கி நிறுத்து கண்மணியே...!
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.