இது என்னடி விசித்திரம்?
பெண்ணே!
உன் கூந்தலில் வீழ்ந்த பூக்களை
உள்ளங்கையில் ஒவ்வொன்றாய்ச் சேமித்தேன்
அவை மொத்தமாய் எனக்கு இரங்கல் செய்கிறதே
இது என்னடி நியாயம்?
மண்ணுக்கும் உனக்கும் என்னடி பந்தம்
உன்னை மடியேந்த துடிக்கிறது
உதிர்ந்த உன் கூந்தல் மண்ணில் ஊன்றி வளர்கிறதே
இதென்னடி அநியாயம்?
விட்டில் எல்லாம் உன் கொலுசாய் மாறத் துடிக்கிறதே
இது எம்மாதிரியான வேட்கை?
உன் பாதம் தழுவிய நீரைக் கங்கை கடனாய்க் கேட்கிறதே
இது எம்மாதிரியான புனிதம்?
உன் கூந்தல் சேரப் பூக்களெல்லாம்
வாள் ஏந்தி நிற்கிறதே இது என்ன புரட்சி?
செதுக்கிய சிலை இன்று விரல் பட்டுச் சிதைகிறதே
இது என்னடி விசித்திரம்?
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.