உனக்கொரு மந்திரம்
சூரிய தீபமாய்
ஒளி வீசு...
பூவாய்ச்
சிரித்து மகிழ்...
ஆகாயமாய்
அன்பைப் பொழி...
ஆழிஅலைகளாய்
விடாமுயற்சி கொள்...
தீமைக்குத்
தீயாய் எழு...
கனிவில்
நீராய் இரு...
சுதந்திரக்
காற்றாய் வாழ்...
நிலவாய்ப்
பால்மனம் கொள்...
மரமாய்க்
கொடுத்துப் பழகு...
சுறுசுறுப்பில்
தேனியாய் இரு...
எறும்பாய்
ஓய்வின்றி உழை...
விலங்காய்
நன்றியுடன் இரு...
பறவையாய்த்
திசைகள் நோக்கி விரை...
மழையாய்த்
தன்னலமின்றி வாழ்...
சிகரமாய்
நிமிர்ந்து நில்...
விழுந்தாலும்
விதையாய் மண்ணில் விழு...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.