ஏன் பிறந்தேன்...?
பதினாறு ஆண்டுகளுக்கு முன்
பாதுகாப்பாய் உன் கருவறையில்
அழுகுரலுடன் பிறந்து உன்
அரவணைப்பில் வளர்ந்தேன்
கவலை இல்லாப் பிஞ்சுப் பருவம்
களிப்பில் திளைத்தேன்... ஒரு
மாலைப் பொழுது
மஞ்சள் நீராட்டு விழா காரணம் கேட்டேன்
மங்கை ஆன கதை சொன்னாய்!
வீட்டில் வறுமையெனப்
படிப்பைப் பாதியில் நிறுத்தினாய்!
தம்பி படிக்கத் தடையில்லையெனச்
சில லட்சங்களைத் தந்த
பணக்கார வாலிபனுக்கு
பணையமாக்கி மணமுடித்தாய்
நித்தமும் அந்தக் காமுகனின்
பாலியல் தொல்லையில்
பாழாய் போனது என் வாழ்க்கை
அதற்கு நீ, என்னைக்
கருவறையிலேயே
கசக்கி எறிந்திருக்கலாம் அம்மா!
- முனைவர் ஜெ.ரஞ்சனி, ஸ்ரீரங்கம், திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.