உன் தரிசனத்தை...
நெடுநேரமாய்க்
கனவுகளைக் கூவிக்கூவி
விற்பவனிடம் காட்சிகளை
விவரிக்கச் சொல்கிறாய்.
வான்வெளியில் கட்டமைத்த
மேகவீட்டில்
ஓடிஒளிகிறது நிலா.
இந்த அந்தியில்
உனது வருகையாயின்
நாளையின்
அந்திப்பெருவெளியில்
நீயும்
என்னை எதிர்பார்க்கலாம்.
பரந்து விரிந்த இவ்வுலகில்
இருந்தும் இல்லாமல் போவது
சிலதே.
நிலைக்கண்ணாடியில்
உன் பிம்பத்தைக் காணும் முன்
உன் தரிசனத்தை
எனக்குச் சொந்தமாக்கி
விட்டுச் செல்.
நான் கைநிறையச்
சூரியனை வைத்துக் கொண்டு
வானம் நிறைய வெளிச்சத்தைத்
தூவப் போகிறேன்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.