ஒதுங்கிப் போனது...?
வயதான சிறு குழந்தை
எங்கள் வீட்டுப் பாட்டி
பெரியவர்க்குப் பெரியவள்
சிறியவர்க்குச் சிறியவள்
கற்றறியா மேதை அவள்
காட்டும் வழி வெற்றி தான்.
குழந்தை கதை கேட்பாள்
குமரி குமுறல் கேட்பாள்
வாலாட்டும் வாலிபனிடம்
உண்மை கூறி உணர்த்துவாள்
ஆனால் இவர்கள் எல்லாம்
அவளைப் புரிவதில்லை.
பாட்டி இருந்த காலம்
வீட்டில் சண்டை இல்லை
நோயும் அண்டவில்லை
சித்த வைத்தியரும் அவள் தான்
சிரிப்பு வைத்தியரும் அவள் தான்
வீடே சிரித்தது அவளால்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை
குலைந்து போனது இன்று
பாட்டி வீட்டில் இருந்தால்
தொல்லை என எண்ணி
ஒதுக்கி வைத்தோம் அவளை
ஒதுங்கிப் போனது
பாட்டியும்... மகிழ்ச்சியும்...
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.