நீ கடவுளல்ல...!
வேறொருவன்
உண்டாக்க
உருவானவன் நீ.
உன் -
உருவாக்கலின்
முனைவுத்திறன்
நீயன்றி
வேறொன்றாகவே!
உன்னால் உன்னை
உண்டாக்கவியலாத
நிலையிலும்
உன்னைச்
சுகித்துக் கொள்கிற
நிலை மட்டும்
உனக்கு
அனுமதிக்கப்பட்டதாய்.
இருக்கின்ற
எவரொருவரும்
அவரவரால்
உண்டாக்கப்பட்டவருமல்ல
பிரிதொருவர்
இருத்தலின்
சான்றின் கூறுகள்.
உனதல்லாத உன்னை
சிறிதும் வெட்கமின்றி
உனதென்றே
உரிமைச் சொல்லித்
திரிகின்றாய்.
உண்டாக்கலின்
குருத்தை மாற்ற
நீ - கடவுளல்ல
மனிதன்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.