ஏன் புலம்பனும்...?
தனிமையைத் தவிர்க்கிறேன்
சூழலை நேசிக்கிறேன்
வாசலில் பள்ளிச் சிறாரின் ஓசை
வீடு திரும்பும் நேரம்
முற்றத்தில் என்னையே நம்பிய
பாசப் பறவைகளின் கொஞ்சலும் கெஞ்சலும்
அதன் சகாக்களோடு
வீட்டினுள் தொலைகாட்சி அலப்பறைகள்
அடுக்களையில்
மகளின் சமையல்
மனம் மனதை வருடுகிறது,..
தோட்டத்தில் இருக்கும்
ரோஜாவை ரசிக்கும்
ஒரு சில வண்ணத்துப்பூச்சி
வண்ணத்தைத் தீட்டுகிறது
உலரும் வேட்டியில்
அதையும்
கடந்து அண்ணாந்து பார்த்தால்
அங்கொரு இசை மீட்டுகிறது
அதுவும் சுவையே
ஆம் அணில் குட்டிகளுடன்
விளையாடிக் கொண்டிருக்கிறது
சில நேரமே
இத்துணை வரமாக கிடைத்தும்
ஏன் தனிமை வெறுமை
என்று புலம்பனும்...?
வயதான காலத்தில்...!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.