என்னவளுக்கு...
மங்கையாய் வந்த மா வரம் நீ
மாசற்ற நிலவு நீ!
மனிதரில் புனிதம் நீ!
மனதின் ஒலி நீ!
மாணிக்கத்தின் மறுபெயர் நீ!
மாசில்லாத மங்கை நீ!
மன்மதனின் தங்கை நீ!
ஆன்மாவின் உருவம் நீ!
ஆழிப்பேரலையும் நீ!
விரல் தீண்டும் சுகம் நீ!
வீரத்தின் விளைநிலம் நீ!
வானத்தின் நிலவு நீ- என்
வாழ்க்கையின் அர்த்தம் நீ!
காத்திருந்து கண்டுகொண்ட காதல் நீ - என்
காமத்தின் கரையற்ற உச்சம் நீ!
பூர்வீக சொந்தம் நீ - என்
பார்வைக்கு வெளிச்சம் நீ!
கற்புக்கு அரசி நீ - என்
கவிதைக்குக் காரணம் நீ!
மனதின் நினைவு நீ-
நினைவின் சுகமும் நீ!
தாலாட்டும் தாய் நீ - என்னைப்
பாராட்டும் சேயும் நீ!
உனக்கு
மங்கையர் தின நல்வாழ்த்துகள்!
- பேரா. டேனியல் ரூபராஜ், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.