எனக்கு முன்
என் உயிரை காற்றாய்த் திரித்து
உன் முகவரியைத் தேடினேனே
தென்றல் முன்னே முந்தியபடி
புயல் என்னைப் பின்னே தள்ளுறானே...
சங்கிலியால் விலங்கு பூட்டி
திருவிழாத் தேராக வாரேனே
என் முன்னே சாமி முந்தி
உன்னைக் கைகூப்பித் தொழுதானே
உன் கன்னத்தில் நான் சேர
நீரில் தூறலாய் சேர்ந்தேனே
என்னை வாளியிலே மொண்டெடுத்து
வாசலில் நீ தெளிக்க உயிரின்றி வீழ்ந்தேனே
கோவில் புறா காலிலெல்லாம்
காதல் கடிதம் வரைந்தேனே
வழிப்பறியாய் அவைகள் மாறி
கடிதம் திருட வியந்தேனே
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.