அனைத்தும் உன்னால்...!
விழிக்கிறாய்
விடிகிறது கிழக்கு.
சோம்பல் களைகிறாய்
பூபாளம் இசைக்கிறது
பறவைகள்.
குளிக்கிறாய்
விழுந்தோடுகிறது அருவி.
ஒப்பனை முடிக்கிறாய்
நறுமணக்கிறது பூக்கள்.
பூச்சூடுகிறாய்
சாளரம் உழிழ்கிறது
நிலா.
உண்கிறாய்
பூக்களில் தேனருந்துகிறது
வண்டுகள்.
நிற்கிறாய்
நெஞ்சை நிமிர்த்துகிறது
சிகரங்கள்.
சிரிக்கிறாய்
சிதறுகிறது முத்துமாலை.
நடக்கிறாய்
விரிகிறது புதியபாதை.
ஓடுகிறாய்
வெள்ளமெடுக்கிறது நதி.
அழுகிறாய்
கண்ணீர்ச் சிந்துகிறது
வானம்.
ஆடுகிறாய்
அலைகளை எழுப்புகிறது
ஆழி.
மூக்குத்தி தரிக்கிறாய்
மின்னுகிறது விண்மீன்கள்.
தலைகோதுகிறாய்
சூழ்கிறது கார்மேகங்கள்.
கோபிக்கிறாய்
இடிகளைக் குமுறுகிறது
கோடை.
தோழியருடன் களிக்கிறாய்
வெடிக்கிறது சரவெடி.
கண்மூடி உறங்குகிறாய்
இருள் கவ்வுகிறது
பூமியில்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.