என் வீட்டு விருந்தினர்கள்
காலையில் காகமும்
முன் பகலில்
வண்ணத்துப் பூச்சியும்
பிற்கலில்
பசுவும் கன்றும்...
எல்லா நேரங்களிலும்
அணிலும் அதன் குடும்பமும்
பல்லியும் எறும்புகளின்
வரிசையும்...
வீட்டு எதிரில்
எலியும் பூனையும்
வண்டுகளின் ரீங்காரமும்
தெருவிளக்கின் ஓரம்
ஒரு ஆந்தையும் அதன் அலறலும்
அமைதியின் போது
குயிலும் மைனாவும்
சிட்டுகுருவியும்...
நான் இல்லாத நேரத்தில்
சிலந்தியும்... என்று
என் வீட்டு விருந்தினர்களாக
வந்து கொண்டேயிருக்கின்றனர்.
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.