பிறந்த நாள்
சிறைவாசப் புழுதியோடு,
வாழ்க்கையை நானும் ஓட்டி வந்தேன்
புதிதாய் நானும் பிறந்தவன் போல்
புதுநூல் கோர்த்து தந்தாயே
வாழ்த்துக்கள் ஆயிரம் வந்தபோதும்
உன் வாய்மொழி எனக்குப் புது வருடம்
கண்ணசைவில் நீ கூறிய வாழ்த்து
கூடிய என் வயதில் மீட்டெடுத்த இளமையது
என் ஆயுள் நீளும் என்று
இதுவரை நான் நினைக்கவில்லை
உன் நினைவுப்பரிசை ஏந்துகையில்
இனிமேலும் அதை மறுக்கவில்லை
சன்னிதானப் படிகளெல்லாம் சக்தியற்று
உன் சன்னதியில் கிடைத்த பிறந்தநாள் வாழ்த்து
என் அடுத்த மூப்பைத் தேடி, தினம்
பன்னிரெண்டு மாதங்களை விரட்டுகிறேன்.
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.