நீ பேசாத நாட்கள்
ஓர் இரவு நீ பேசவில்லை
பூச்சி புழுவைக் கூட்டி ஒப்பாரி வைத்தேன்
கண்ணில் ததும்பத்ததும்ப நீர் ஒழுக
மொத்தமாய்க் காவிரிக்கு திருப்பிவிட்டேன்
என் தோள்மீது சாய்வேன் என்று
சொன்னதெல்லாம் பொய்யோ என்றேன்
மாமா உன் தோள் மீது
சாஞ்சிக்கிறேன்னு மறுநாள் வந்தியே
தீப்பந்தம் நான் கொளுத்தி உனக்காகக் காத்திருக்க
மனசக்குள்ளே கதவைத் தட்டும் சத்தம்
யாருன்னு எட்டி பார்க்க
இதயத்தோடு பேசலாமுன்னு என்னைக் கூட்டிப் போனியே
இரவு முழுக்க நாம் பேச
எழுத்து காலி ஆகுமுன்னு
கலியுலகக் காலத்திலும் எனக்குக்
கடிதம் எழுதிக் போட்டாயே
பல இரவு போயிடுச்சி
இன்னும் நாம் பேசவில்லை
ஒப்பாரி வைக்க ஆளில்லை
சகியே, தனியே நான் என்ன செய்ய...?
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.