ஒரு நிமிடம்
ஓஅன்பே என் கண்களைக் கவனி
கண்ணாடியின் தேவையிருக்காது
என் இதயத்துடிப்பை உற்று நோக்கு
நொடிக்கு நூறு பெயரில் உன்னை அழைக்கிறது
கையைக் காற்றில் நீட்டிக் கேளேன்
என் மூச்சுக்காற்றின் சூட்டைக் கூறும்
வெறுங்காலில் மண்ணில் கோலமிட்டுப் பாரேன்
என் நரம்பின் அதிர்வுகள் புரியும்
தபால் பெட்டியிடம் கேட்டுப்பார்
முத்திரைக்குக் கண்மையைக் கடனாய்க் கேட்கும்
உன்னையெழுதிய இலக்கணத் தாள்களைப் புரட்டிப்பார்
எண்ணி முடிக்க காற்றின் ஆயுள் குறைந்து போகும்
என் கோரிக்கைகளை மனுக்களாய் எழுதி
ஆகாயத்தை உரையாய் மடித்தேன்
விடியும் முன்னமேப் படித்துவிடு
வெண்திருடன் வருவான் படித்ததும் எரித்துவிடு
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.